கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் ,ஊழியர்களுக்கான தலைமைத்துடனான வாண்மை விருத்தி மற்றும் நீச்சல் பயிற்சி தொடர்பான பயிற்சி கருத்தரங்கு மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் நடைபெற்றது.
தற்போதைய சூழ்நிலையில் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் ,ஊழியர்களின் உளநல செயல்பாட்டு நடவடிக்கையின் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் கற்றல் செயல்பாட்டு நடவடிக்கையில் ஈடுபடும் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் ,ஊழியர்களின் வாண்மை விருத்தி செயல்பாட்டினை மேம்படுத்தலாக வாண்மை திறன் விருத்தி மற்றும் நீச்சல் பயிற்சி தொடர்பான பயிற்சி கருத்தரங்கு இடம்பெற்றது
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் முகாமைத்துவ பிரிவின் விசேட கல்விக்கான ஆசிரியர் ஆலோசகர் ஜெயஹரன் ஒழுங்கமைப்பில் மேற்கு வலயக்கல்வி கல்விப்பணி ப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் வளவாளர்களாக வைத்தியர் சுந்தரேசன் மற்றும் சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர் ஒரு நாள் கருதரங்காக இடம்பெற்ற பயிற்சி கருத்தரங்கில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலக கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் கலந்துகொண்டனர்