பொறியில் சிக்கிய பெண்பொறியில் சிக்கிய பெண் சிறுத்தையை வனவளத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர்.யை வனவளத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர்.

 


கிளிநொச்சி பூநகரி வேரவில் பகுதியில் தனியார் ஒருவரின் தோட்டத்தில் வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய பெண் சிறுத்தையை வனவளத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர்.

தோட்டத்திற்கு வரும் பன்றி,முயல் உள்ளிட்ட விலங்குகளுக்காக வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய நிலையில் சிறுத்தை காணப்பட்டதை அவதானித்த காணி உரிமையாளர் கிராம சேவையாளர் மூலம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் குழு குறித்த சிறுத்தையை மீட்டு சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் வடமாகாண மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கு   கொண்டு சென்றுள்ளது