எட்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து நான்கு நிறுவனங்களாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
விவசாய அமைச்சின் கீழ் இயங்கிவரும் மில்கோ நிறுவனம், கால்நடை அபிவிருத்திச் சபை, ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அநுராதபுரம் அறுவடை பின் தொழில்நுட்ப நிறுவனம், லங்கா உர நிறுவனம், வர்த்தக உர நிறுவனம், லங்கா ஹதபிம அதிகாரசபை மற்றும் உணவு ஊக்குவிப்பு சபை ஆகிய 8 நிறுவனங்களே நான்கு நிறுவனங்களாக இணைக்கப்படவுள்ளன.
அதற்கிணங்க, தற்போதுள்ள நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அடுத்த வருடம் முதல் ஒரு தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் செலவு முகாமைத்துவ கொள்கைகளின் கீழ்
நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட
நிறுவனங்களின் செலவுகள் சுமார் 50 சதவீதத்தால் குறைக்கப்படும் என்றும்
குறித்த தீர்மானம் ஜனாதிபதியால் பாராட்டப்பட்டதாகவும் அமைச்சர்
குறிப்பிட்டார்.