மட்டக்களப்பு புனித தெரேசா பெண்கள் பாடசாலையின் பரிசளிப்பு விழா.

 


மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு புனித தெரேசா பெண்கள் பாடசாலையின் பரிசளிப்பு விழா பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் , பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் 92 வருடங்களுக்கு பின் முதல் முறையாக பாடசாலை அதிபர் பேரின்பநாதன் தலைமையில் நடைபெற்றது

மட்டக்களப்பு புனித தெரேசா பெண்கள் பாடசாலையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகள் மற்றும் பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்ற மாணவர்கள் , தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்த மாணவர்கள் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் மாணவர்கள் பதக்கங்களும் ,சான்றிதழ்களும் , வெற்றி கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

நிகழ்வில் ஆன்மீக அதிதியாக அருட்தந்தை அனிஸ்டன் மொறாயஸ் ,பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயக் கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் ,சிறப்பு அதிதியாக கோட்டக்கல்விப்பணிப்பாளர் இரவிசந்திரா மற்றும் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை சமூகம் என பலர் கலந்துகொண்டனர் .