முதன்மையானவர்களான மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

 


2021 ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் 100 கல்வி வலயங்களில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதன்மை இடத்தினை பெறுவதற்குரிய முதன்மையானவர்களான மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வுக்கு அமைய முதலாவது தடவை பரீட்சைக்கு தோற்றி கணிதம் மற்றும் தமிழ் மொழி உட்பட 80.64 வீதத்தையும் , க.பொ.த.உயர்தரத்திற்கு தகுதி பெற்றவர்கள் 87.01வீதத்தையும் பெற்று மட்டக்களப்பு கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலை எனும் சாதனை படைத்துள்ளது.

குறித்த சாதனைக்குரிய முதன்மையானவர்களான மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்கள் அவர்களுக்கு வழிகாட்டியான அதிபர்கள் ஆகியோரை வாழ்த்தி பாராட்டுகளையும் கௌரவிப்புகளையும் தெரிவிக்கும் வகையில் வலயக்கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திர குமார் தலைமையிலான வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் ,கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள் நேரடியாக பாடசாலைகளுக்கு சென்று பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் ,மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்

அந்தவகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மத்திய கல்லூரி , வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை , புனித சிசிலியா பெண்கள் பாடசாலை ,புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம் , கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம் ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் , கருவப்பங்கேணி விபுலானந்த கல்லூரி , மகாஜன கல்லூரி , சிவானந்தா தேசிய பாடசாலை , கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயம் , ஆரையம்பதி ராமகிருஷ்ண மிஷன் , மாவிலங்கு துறை மற்றும் புது குடியிருப்பு கண்ணகி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்து மாணவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது