பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை
மாணவர்களில் கல்வி வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் விழிப்புணர்வு செயலமர்வு
மட்டக்களப்பில் நடைபெற்றது
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின்
ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்துவரும் சமூக அபிவிருத்தி
வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை
தடுக்கும் வகையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக மாணவர்களுக்காக
நடாத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு
இந்து கல்லூரியில் நடைபெற்றது
மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் தலைவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆலோசகருமான சிவஸ்ரீ.வீ.கே.சிவபாலன் குருக்களில் ஒருங்கிணைபில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கணகசபாபதி ரஜனிகாந்த் தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வில் பிரதான வளவாளராக மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் கலந்துகொண்டார்
சர்வமத பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்விற்கு ஆன்மீக அதிதிகளாக
மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை கே.ஜெகதாசன்,
மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியத்தின் உபதலைவர் சாஜகான் மௌழவி,
மட்டக்களப்பு மங்களாராமய விகாரை விகாராதிபதி விமல ஹிர்த்தி உள்ளிட்டோர்
கலந்துகொண்ட நிகழ்விற்கு அதிதிகளாக பிரதி வலயக்கல்வி பணிப்பாளர்
எஸ்.ரவிராஜ், இந்துக்கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், செஞ்சிலுவை
சங்கத்தின்
மட்டக்களப்பு கிளை தலைவர் ஆர்.வசந்தராஜா உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது சமகாலத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சவாலாக அமைந்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பாவும், அதனால் மாணவர்களில் கல்வி வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம், மற்றும் இதனூடாக குடும்பங்களில் ஏற்படும் பின் விளைவுகள், சிறைச்சாலையில் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .