ஆயித்தியமலையில் உள்ள கமநல சேவை நிலையத்தினால் பெரும்போகத்திற்கா ன இலவச உர விநியோகம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷிட் தலைமையில் இன்று (06) கமநல சேவை நிலைய வளாகத்தில் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
2022/2023 பெரும்போகத்திற்காக USAID/FAO (Food and Agriculture Organization) நிறுவனத்தினால் வழங்கப்பட்ட இலவச யூரியா உரத்தினை விவசாய நடவைக்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் 2 ½ ஏக்கருக்கு குறைவான காணிப் பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆயித்தியமலை கமநல சேவை அதிகார எல்லைக்குள் இருந்து தெரிவு aசெய்யப்பட்ட 955 விவசாயிகளுக்கு சில நிபந்தனையின் அடிப்படையில் இலவச யூரியா உரம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் கமநல அபிவிருத்திக்குழு தலைவர், கமநல சேவை உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.