மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இரத்ததான முகாம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன
ஐ டி எம் , கல்வி நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய நிறுவனத்தின் நான்காவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவுடன் இணைந்து இரத்ததான முகாம் இன்று இடம்பெற்றது.
ஐ டி எம் , கல்வி நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் டி .சசிகுமார் தலைமையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவு வைத்தியர் விவேக் , பொதுசுகாதார பரிசோதகர் பி. எம் .எம் .பைசல் , பொதுசுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் ஆர் அனுபிரதாப் ,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், ஐ டி எம் , கல்வி நிறுவன மாணவர்கள் கலந்துகொண்டனர்.