ஐஸ் போதைக்கு பின்னால் யாரவது ஒரு சிலரது திட்டங்கள் நனவாகிக்கொண்டு இருக்கிறதா..?

 


இலங்கை மீளவே முடியாத ஒரு பிரச்சனையில் கால் வைத்திருக்கிறது,  அதிலும் குறிப்பாக தமிழர் தாயக பிரதேசங்களான வடக்கு கிழக்குபகுதிகள் தான் அதிக ஆபத்தில் சிக்கியிருக்கிறது

3 வயது குழந்தையை ஒரு தந்தை வன்புணர்வு செய்திருக்கிறான் என்றால் அவனுள்ளே இருந்திருக்க கூடிய அந்த மதுபோதையின் தாக்கம் எப்படியானதாக இருந்திருக்கிறது.

உண்மையிலே இன்று பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருக்க கூடிய இந்த ஐஸ் எனும் போதை பொருள் ஸ்ரீலங்காவை பொறுத்த வரை முன் எப்போதுமே பயன்பாட்டிலே இல்லாதா ஒன்று , அப்படியிருக்கையில் இந்த ஐஸ்ஐ முதன் முதலாக பயன்படுத்த கற்றுக்கொடுத்து யார்..? இதனுடைய ஆரம்பபுள்ளி ஏது..?

வீதிக்கு வீதி ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமையிலே இருக்கின்றார்கள் அப்படியிருந்தும் எப்படி இந்த ஐஸ் நாட்டிற்குள்ளே வருகின்றது

 தடுக்கமுடியாமல் வடக்கு கிழக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த ஐஸ் போதைக்கு பின்னால் யாரவது ஒரு சிலரது திட்டங்கள் நனவாகிக்கொண்டு இருக்கிறதா..?