போரதீவுப்பற்று பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றது.

 


போரதீவுப்பற்றுபிரதேசத்தில் பரவிவரும் டெங்குநுளம்பின் பெருக்கத்தை இல்லாதொழிக்கும் வகையில் இங்குள்ள கிராமங்கள் தோறும் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகள் பிரதேசசெயலாளர் ரா குலநாயகி வழிகாட்டலில் நடைபெற்றுவருகின்றது.

இதற்கமைய வெல்லாவெளி பிரதான வீதியில் தொடங்கி பட்டிருப்புபாலம் வரைக்குமான பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பாதையின் இருமருங்கிலும் காணப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள்,பொலித்தீன் பைகள்,குப்பைகூளங்கள் மற்றும் டெங்குபரவக்கூடிய நீர்தேங்கி நிற்கக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இச்சிரமதானநடவடிக்கையில் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட சகல கிராமக்களில் இருந்தும் சமுர்த்திப் பயனாளிகள் கலந்துகொண்டிருந்தனர்.