மண்முனைப்பற்று பிரதேச செயலகமும், சமூக உள்வாங்கல் அமைப்பும் இணைந்து நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா சமூக உள்வாங்கல் அமைப்பின் உப தலைவர் ஆ.பரமேஸ்வரன் தலைமையில் தாழங்குடா சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
இநிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி கலந்துகொண்டார். அத்துடன் சிறப்பு அதிதிகளாக மண்முனைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி.லோகினி விவேகானந்தராசா, புதுக்குடியிருப்பு ஆயள்வேத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஜெயலக்ஷ்மி பாஸ்கரன்
சமூக சேவை உத்தியோகத்தர் ச.கோணேஸ்வரன் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு மாற்றுத்தினாறிகளுக்கு இடையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் மாற்றுத்திறனாளிகளினால் கவிதை, பாடல், நடனம் போன்ற பல்வேறு ஆற்றுகைகள் நிகழ்த்தப்பட்டதுடன்,
மாற்றுத்திறனாளிகளாக கல்வி கற்கும் மாணவர்களுக்கும், அங்கத்தவர்களின் பிள்ளைகளிற்கும் கற்றல் உபகரணங்களும், நுளம்பு வலைகளும் வழங்கிவைக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது.