இளவயது திருமணம், இளவயது கர்ப்பம், கருக்கலைப்பு என்பன அதிகாரித்து வருகின்றது.

 


முல்லைத்தீவு மாவட்டத்தில் 500 இற்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைகள் பதிவாகியுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.விஜயந்தி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

 தொடந்து கருத்து தெரிவித்த அவர், 2022 ஆம் ஆண்டு மட்டும் பிரதேச செயலகங்களில் இவை பதிவாகியுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் 160 இற்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைகள் பதிவாகியுள்ளன.

இது பாரிய சவாலாக இருக்கின்றது. எத்தனையோ சம்பவங்கள் வெளியில் வராமல் இருக்கின்றன. காவல் நிலையங்களுக்கு செல்வதை விட பிரதேச செயலகங்களுக்கு வரும் முறைப்பாடுகள் அதிகமாக இருக்கின்றது.

இளவயது திருமணம், இளவயது கர்ப்பம், கருக்கலைப்பு என்பன அதிகாரித்து வருகின்றது.

இதனைக் குறைப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டு கொண்டு இருக்கின்றோம்” என்றார்.