மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கல்வி வலயங்களுக்கு பரீட்சை தாள்களை நேரடியாக சென்று வழங்கிவைத்தார்.

 



இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஊடாக ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை வினாத்தாள்கள் விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் மட்டக்களப்பு வலயம்,பட்டிருப்பு வலயம்,மட்டக்களப்பு மேற்கு வலயம்,வெருகல் ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கான வினாத்தாள்கள் அந்ததந்த வலய கல்விப்பணிமனைகளிடம் கையளிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஊடாக ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகளையும் அவர்களுக்கான எதிர்பார்க்கை பரீட்சை வினாதாள்களையும் வழங்கும் பணிகளை முன்னெடுத்துவருகின்றது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கல்வி வலயங்களுக்கு பரீட்சை தாள்களை நேரடியாக சென்று வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில் கல்வித்திணைக்கள அதிகாரிகள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் மதிமேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.