மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மாதந்தோறும் நடைபெறும் பௌர்ணமி கலை விழாவானது இம்மாதமும் வெகு விமர்சையாக மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இசை, நடனம், நாடகம் என பல அரங்கியல் ஆற்றுகைக் கலையம்சங்களை கலைஞர்கள் நிகழ்த்தியிருந்தனர்.
இதன்போது பௌர்ணமி கலை விழாவில் நிகழ்ச்சிகளை நெறியாள்கை செய்த ஆசிரியர்கள், நிகழ்வுகளில் கலந்துகொண்ட கலைஞர்கள், தொகுப்பாளர் உள்ளிட்ட பலரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.