பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனைக்குட்பட்டஅழகியற்பாட ஆசிரியர்களுக்கான விசேட கலந்துரையாடல் கூட்டம் பட்டிருப்பு வலய நாடகமும் அரங்கியலும் ஆசிரிய ஆலோசகர் வனிதாசுரேஸ் ஒழுங்கமைப்பில் கோட்டைக்கல்லாறுமகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அழகியற்பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் சுந்தரலிங்கம் கலந்துகொண்டார். இங்கு எதிர்வரும் புதிய ஆண்டில் அழகியற்பாடங்களை மாணவர்கள் விரும்பத்தக்கவகையில் எவ்வாறு கற்பிக்கவேண்டும் என்பது தொடர்பாக கலந்துரையாடப்ட்டது. அத்துடன் எதிர்வரும் நாட்களில் தனது 38 வருடக் கல்விச் சேவையில் இருந்து ஒய்வுபெற்றுச் செல்லவுள்ள அழகியற்பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் சுந்தரலிங்கம் ஆசிரியர்களினால் பொன்னாடை போர்த்தி,வாழ்த்துப்பா,பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.