புதுவருட பண்டிகை காலத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட நுகர்வேர் அதிகாரசபையால்
வியாழக்கிழமை (01) முதல் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை வர்த்தக நிலையங்களை
முற்றுகையிட்டு விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட நுகர்வேர்
அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.
வருட கடைசியில் காலாவதியாகும் மனித பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை
செய்வதையும் அரச கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்வதை தடுப்பதற்காக இந்த
சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
சோதனை நடத்தப்படும் என்றார்.