இருபதாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் ஹொரவப்பொத்தானை உள்ளூராட்சி சபையின் தொழிநுட்ப அதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவிற்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
தொழிலதிபரின் மனைவிக்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு உரிமம் வழங்குவதற்காக சந்தேகத்திற்குரிய தொழில்நுட்ப அதிகாரி இருபதாயிரம் ரூபா இலஞ்சம் கேட்டதாகவும், அதன்படி அந்த தொகையை பெற சென்ற போதே கைது செய்யப்பட்டதாகவும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.