கிழக்கு மாகாண மீன்பிடிப் பணிப்பாளர் பைந்தமிழ்ச்சுடர் எஸ்.சுதாகரனின் (நிலையூர் சுதா) கிடுகு வீடு நூல் அறிமுக விழா கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின்போது ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சிவாமி சுராச்சிதானந்தரும், கௌரவ அதிதிகளாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன், திருமலை வளாக முதல்வர் பேராசிரியர் வதனி தேவதாசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செய்யத் அலிசாஹிர் மௌலானா, கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கம், சீனித்தம்பி யோகேஸ்வரன், மட்டக்களப்பு தமிழ்ச் சங்க தலைவர் சைவப்புலவர் வி.ரஞ்சித மூர்த்தி, பன்முகக் கலைஞர் இ.நகுலேஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் தமிழ் ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது "கிடுகு வீடு" நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், அந்நூலின் பிரதிகள் ஆன்மீக அதிதி உள்ளிட்ட கௌரவ அதிதிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டதுடன், நடனம், அதிதிகள் உரை மற்றும் நூலாசிரியரின் ஏற்புரை என்பன இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்துள்ளது.