Shiva murugan
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று (2022.12.03)அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இருந்து மாநகர சபை வரை விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இடம் பெற்றது .
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மாற்று திறனாளிகள் இதில் கலந்து கொண்டனர் .
மேலும் மாநகர சபை மண்டபத்தில் மாற்று திறனாளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு, மாற்றுத் திறனாளிகள் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக கௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளும் வெகு விமர்சையாக இடம் பெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு K. கருணாகரன் அவர்களும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் கௌரவ T.சரவணபவன் அவர்களும் விசேட அகதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர் .