வடக்கு, கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
சனிக்கிழமை (17) நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இ. சாணக்கியன், தவராசா கலையரசன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் செல்வராஜா கணேஸ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.