வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கை.

 



 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கையினை மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 1975 ஆண்டு மாணவர்களுடன், மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய புனித வின்சன்ட் டி போல் சபையினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர். 

அந்தவகையில் மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய பங்கு தந்தை சி.வி.அன்னதாஸ் அடிகளாரின் தலைமையில், ஆலய பங்கு வட்டார தலைவர்களினால் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கு உலர்வுணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் ஆலய பங்கு நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய புனித வின்சன்ட் டி போல் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு உலர்வுணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.