மட்டக்களப்பு ஒசானம் இல்லம் விசேட தேவையுடையவர்களின் ஒளிவிழா நிகழ்வு ஒசானம் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில்
இயங்கி வரும் விசேட தேவையுடைவர்களின் நிலையங்களின் ஒன்றான ஒசானம் இல்ல
விசேட தேவையுடையவர்களின் ஒளிவிழா நிகழ்வு ஒசானம் இல்ல பொறுப்பாளர் வட்சலா
ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை
தலைமையில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் இயங்கி வரும் ஒசானம் இல்லத்தின் பிள்ளைகள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மதிவண்ணன் , வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியிலாளர் காண்டீபன் , அருட்தந்தையர்கள் ஒசானம் இல்லம் ஊழியர்கள் . விசேட தேவையுடைய பிள்ளைகள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்
ஒளிவிழா நிகழ்வில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் அதிதிகளினால் பிள்ளைகளுக்கும் , ஊழியர்களுக்கும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன