தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் வடகிழக்கில் நிகழ்த்தப்பட்ட முதலாவது சாதனை!!













தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ( Kumite / fighting ) வெள்ளிப் பதக்கத்தை வென்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கராத்தே வீரன் ஆர்.துஷியந்தன் மற்றும் அவரின் பயிற்றுவிப்பாளர்களான  ஆர்.கௌசிகன், என்.ஆர்.சில்வா  ஆகியோரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சார்பாகவும், கட்சியின் கௌரவ தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்கள் சார்பாகவும் கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சாதனையானது வடகிழக்கில் நிகழ்த்தப்பட்ட முதலாவது சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன்,  இளைஞரணி செயலாளர், சுரேஷ்குமார், பிரதிச்செயலாளர் பஞ்சலிங்கம்,  கல்வி, கலை,  கலாச்சார செயலாளர் மணிசேகரன், ஊடகச் செயலாளர் லிசோத்மன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் JKMO கராத்தே விளையாட்டு கழக மாணவர்களென பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.