மட்டக்களப்பு நாவற்குடா மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் காத்தான்குடி கடற்கரையில் சடலமாக மீட்பு

 


மட்டக்களப்பு காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள பாலமுனை நடுகோடை கடற்கரையில் ஒருவரின சடலம் ஒதுங்கி உள்ளதாக காத்தான்குடி பொலீசார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் நாவற்குடா மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய மனோகரன் என்பவரின் சடலம் என காத்தான்குடி பொலீசார் தெரிவித்தனர்.

குறித்த நபர்  வெள்ளிக்கிழமை காணாமல் போய் இருந்ததாகவும் இவர் பூநொச்சிமுனை கடலில் விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இவரை அவரது உறவினர்கள் தேடி வந்தனர்.

நாவற்குடா மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய மனோகரன் என்பவர் நேற்று வெள்ளிக்கிழமை காணாமல் போயிருந்தார்

இந்த நிலையில்  இவரது சடலம் பாலமுனை நடுவோடை கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளது

கரை ஒதுங்கிய சடலத்தை கண்ட அப்பகுதி மீனவர்கள் பொது மக்கள் கரைக்கு மீட்டு காத்தான்குடி பொலீசாருக்கு தெரியப்படுத்தி உள்ளனர். இதை அடுத்து ஸ்தளத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலீசார் ஆரம்பக் கட்ட விசாரணைகளைய கொண்டனர்

குறித்த நபர் சுகயீனமானவர் என தெரிய வருகிறது.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்