மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த ஆசிரியர் அஜ்வத் அவர்களை நேற்று மாலையிலிருந்து இவரை காணவில்லை.

 


மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த ஆசிரியர் அஜ்வத் அவர்களை நேற்று மாலையிலிருந்து இவரை காணவில்லை என காத்தான்குடி பொலீஸ் நிலையத்தில் அவரது உறவினர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார் 51 வயதான காத்தான்குடியைச் சேர்ந்த ஆசிரியர் அஜ்வத் ஒள்ளிக்குளம் அல்ஹம்றா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை ஆற்றி வருகின்றார்

நேற்று மாலை அவரது பாலமுனையில் உள்ள காணிக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் நேற்று இரவு வீடு திரும்பவில்லை எனவும் (இதுவரை வீடு திரும்ப வில்லை )அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர இவர் ரி.வி.எஸ். மோட்டார் சைக்கிளில் சென்றதாகவும் சாரன் சேர்ட் அணிந்திருந்ததாகவும் உறவினர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்
;
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலீசார் மேற்கொண்டு வருவதுடன் உறவினர்களும் இவரை தேடி வருகின்றனர்