ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 


அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு அதிக வரிகளை அறவிட அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக தொழில் வல்லுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 20,000 வைத்தியர்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஜனவரி 10ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட மனு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட உள்ளது.