வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்து படம் எடுத்து மிரட்டி பணம் பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்த போது பகிர்ந்து கொண்ட படத்தை காட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த இளம் யுவதி ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி அவரது அந்தரங்க படங்களை வைத்து பணம் பறித்ததாக வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு எதிராக வவுனியா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.