மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலய ஞாயிறு பாடசாலை மாணவர்களின் வருடாந்தம் ஒளிவிழா நிகழ்வு ஆலய தலைமை போதகர் அருட்பணி பி .டப்ளியு . மரியதாஸ் தலைமையில் ஆலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை மலர்மாலை அணிவித்து பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்
இதனை தொடர்ந்து விசேட ஜெப ஆராதனை வழிபாடுகளுடன் மாணவர்களின் ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது .
ஒளிவிழா நிகழ்வில் அதிதிகளாக மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாஹரன் . மட்டக்களப்பு வலயக்கல்வி உதவி கல்விப்பணிப்பாளர் கே .ஹரிஹரராஜ் ,ஸ்ரீலங்கா விமானப்படையின் மட்டக்களப்பு விமானப்படை அதிகாரி குரூப் கேப்டன் வர்ணசூரிய , 231 பாதுகாப்பு படைப்பிரிவு அதிகாரி லெப்டினெல் கேணல் தம்மிக்க வீரசிங்க , மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எஸ் .ராஜன் , போதகர் கிறிஸ்துதாஸ் , அருட்பணியாளர்கள், ஞாயிறு பாடசாலை ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் .பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .
2022 ஆம் ஆண்டு ஒளிவிழா சிறப்பு நிகழ்வாக ஜெயந்திபுரம் கிராம சேவையாளர் பிரிவில் வறுமை கோட்டின்கீழ் வாழும் பல் சமய குடும்பம்களின் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன