பாடசாலை மாணவர்களின் திறமையினை வெளிக்கொண்டு வருதலும் திறமைக்கான பாராட்டுக்களை வழங்கலும் என்ற நோக்கத்துடன் மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு இடையே ஒழிந்திருக்கும் ஓவியத் திறமையை அடையாளம் கண்டு வெளிப்படுத்துவதற்காக இப்போட்டி நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கான நிதி அனுசரனையை மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் சார்பில் ஐக்கிய அமெரிக்க கல்வி, புத்தாக்கம், தலைமைத்துவம், சமூக சேவை அமைப்பிற்கு ஐக்கிய அமெரிக்கா, வட அமெரிக்கா தமிழ்ச் சங்கம், ஜேர்மனி, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து, ஆகிய நாடுகளில் வாழும் மாவட்டத்திலிருந்து
புலம் பெயர்ந்தவர்கள் நிதிப் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
இப்பரிசளிப்பு நிகழ்விற்கு அதிதிகளாக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கெனடி பாரதி, கட்புலத்துறைத் தலைவர் கலாநிதி சு.சிவரெட்னம், கிழக்கு பல்கலைக்கழக உதவி நிதியாளர் எஸ். ரெட்ணராஜ், மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளர், சுவாமி விபுலானந்தா பல்கலைக்கழக பிரதி நிதியாளர் திருவருட்செல்வன் மற்றும் சுவாமி விபுலானந்தா பல்கலைக்கழக ஓவியத்துறை விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலயம், மட்டக்களப்பு மேற்கு மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயம், இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலம், மட்டக்களப்பு மத்தி அல் அமீன் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை, முனைக்காடு கிழக்கு, கொக்கட்டிச்சோலை விவேகானந்தா மகா வித்தியாலயம், மட்டக்களப்பு மெதடிஸ்த் மத்திய கல்லூரி மற்றும் தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இவ்ஓவியப் போட்டியில் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.