மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் சாதனைகள் படைத்த மாணவர்கள் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
இதன்போது தேசிய மட்டம் , மாகான மட்டம் , மாவட்ட மட்டம் மற்றும் வலய மட்டத்தில் பாடசாலை மற்றும் மாணவர்களுக்கிடையில் சகல துறைகளிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்று சாதனைப்படைத்த மாணவர்கள் , 2021 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட கல்வி பொது தாரா தர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டு சான்றிதழ்களும் ,விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன
மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திர குமார் தலைமையில் நடைபெற்ற மனவர்களுக்கிடையிலான சாதனையாளர் பாராட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச். இ .எம். டப்ளியு .ஜி .திஸாநாயக்க ,கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் என் .புள்ளநாயகம் , மற்றும் ஒய்வுவிலை கல்விப்பணிப்பாளர்கள் , வைத்தியர்கள் , கல்வித்திணைக்கள அதிகாரிகள் ,ஆசிரியர் ஆலோசகர்கள் , பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் .பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்
சாதனையாளர் பாராட்டு விழா நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது