மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வீதியில்
சென்றுகொண்டிருந்தவர் தனது வர்த்தக நிலையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளை
திருப்பியபோது வேகமாக வந்த லொறி குறித்த நபர் மீது மோதியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்தவர் உடனடியாக ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.