மண்முனை மேற்கு பிரதேச மட்ட கண்காட்சியானது வவுணதீவு பொதுச்சந்தை முன்பாக பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம் பெற்றது.
இதில் கௌரவ விருந்தினர்களாக மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி.சுபா சுதாகரன், கணக்காளர் ச.சுந்தரலிங்கம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் செ.சபேஷ், நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் றஊப், மட்டக்களப்பு மாவட்ட செயலக மேற்பார்வை உத்தியோகத்தர் ரி.நிலோஷன், மண்முனை மேற்கு பிரதேச சமுர்த்தி முகாமையாளர் திருமதி.க.வாமதேவன், சமுக சேவை உத்தியோகத்தர் திருமதி.சி.சிவநாயகம் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.அரசகுமார் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.