இலங்கை காற்றின் தரச் சுட்டெண் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

 


இலங்கை காற்றின் தரச் சுட்டெண் சனிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் ஞாயிற்றுக்கிழமை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும், ஞாயிற்றுக்கிழமை (11) காலை 11 மணி நிலவரப்படி கொழும்பின் காற்றுத் தரச் சுட்டெண் 117 ஆக உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

நோய்ப் பாதிப்புகளையுடைய குழுக்களுக்கு இந்த சுட்டெண் ஆரோக்கியமற்ற மட்டமாகக் கருதப்படுவதாகத் தெரிவித்துள்ள ஆராய்ச்சி நிறுவனம் 101-150 க்கு இடையேயுள்ள காற்றின் தரச் சுட்டெண், பாதிப்புகளையுடைய உணர்திறக் மிக்க குழுவினருக்கு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மோசமான காற்றின் தரத்தின் காரணமாக, சுவாசிப்பதில் சிரமம், மூக்கில் அரிப்பு, தொண்டை எரிச்சல் மற்றும் லேசான காய்ச்சல் போன்ற லேசான அறிகுறிகளுக்கு ஏற்படும் என்றும் மருந்துகள் இல்லாமல் அவை குறையும் என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், மோசமான காற்றை நீண்டகாலமாக சுவாசிப்பது சுவாச அமைப்பை பாதிக்கலாம் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.