கடந்த 16ம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கிரிக்கெட் திருவிழா 18ம் திகதி மிகவும் கோலகலமாக நிறைவுக்கு வந்தது.
இப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் சீரற்ற காலநிலையால் சில போட்டிகள் நடாத்தாமலும் சில போட்டிகள் இடை நடுவில் கைவிடப்பட்டதாகவும் காணப்பட்டது. அதே போன்ற தொரு நிலை தான் இறுதி போட்டிக்கும் ஏற்பட்டது. இறுதி போட்டி நடைபெற்ற போது மழை இடைநடுவில் குறுக்கிட்டு இறுதியில் இணைசம்பியனாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
போட்டி ஆரம்பிப்பதற்காக நாணய சுழற்சி செய்யப்பட்டு இறுதியில் மழை காரணமாக 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. முதலில் EPP அணி துடுப்பெடுத்தாடிய 10 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை இழந்து 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டாத்தில் சஞ்சயன் 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் அணித்தலைவர் சுமந்த சம்பத் அவர்கள் 02 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார்.
இருந்த போதிலும் தொடர் மழை காரணத்தால் போட்டியை நடத்த முடியாது என மத்தியஸ்தர் மற்றும் நடுவர்கள் அணித்தலைவருடன் கலந்துரையாடி முடிவுகள் எட்டப்பட்டு போட்டி முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிகழ்வுக்கு வாகரை இராணுவ கட்டளை அதிகாரி வசந்த ஹேவகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி இருந்தார்.
இப்போட்டியில் கலந்து கொண்ட நியூ ஈஸ்டன் ஸ்டார் அக்கடமி, மாதம்ப கிரிக்கெட் அக்கடமி மற்றும் மானல்ல கிரிக்கெட் அக்கடமியின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக ஜம்பதாயிரம் ரூபாய் புவனசிங்கம் வசீகரன் அவர்களால் வழங்கப்பட்டது.
இப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த களத்தடுப்பாளர், சிறந்த விக்கெட் காப்பாளர், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த தொடராட்டக்காரர் மற்றும் இறுதி ஆட்டத்தின் சிறந்த வீரருக்கான விருதும் வழங்கி வைக்கப்பட்டது.