வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் (USAID) நிர்வாகி சமந்தா பவரை சந்தித்துள்ளார் .

 


 அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் (USAID) நிர்வாகி சமந்தா பவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலதிக உதவிகளைப் பெறுவது தொடர்பாக அமைச்சர் சப்ரி, நிர்வாகி சமந்தா பவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் விடுத்த அழைப்பின் பேரில் அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4ஆம் திகதி வரை அமைச்சர் அமெரிக்காவில் தங்கியிருப்பார்.
அவரது பயணத்தின் போது, ​​வெளிவிவகார அமைச்சர் சப்ரி வெளிவிகார அமைச்சர் பிளிங்கன், காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் பல பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார்.