செங்கலடியில் ஒரே நாளில் 05 டெங்கு நோயாளிகள் - இறுக்கமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவிப்பு!!

 



 


செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐந்து டெங்கு நோயாளிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனைத்து சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.சுகுணன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிராந்திய தொற்றுநோய்களுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி வைத்தியர் குணராஜசேகரம், செங்கலடி பொது சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் ஸ்ரீநாத், மாவட்டநிலை பொது சுகாதார உத்தியோகத்தர், செங்கலடி பொது சுகாதார உத்தியோகத்தர்கள் என துறைசார் அதிகாரிள் பங்குபற்றி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது டெங்குக்காய்ச்சலை கட்டுப்படுத்துமுகமாக எப்படி நுளம்புப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பாக பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன், விழிப்புணர்வு, திண்ம கழிவகற்றல், சட்ட நடவடிக்கை, வைத்தியசாலை தொடர்பாடல்கள் சம்பந்தமான முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது.
எதிர்வரும் தினங்களில் இறுக்கமான நடவடிக்கைகளை செங்கலடிப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக இதன்போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.சுகுணன் தெரிவித்துள்ளார்.