இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், மண்முனை வடக்கு பிரதேச செயலகம், அறநெறி
பாடசாலைகள் பாடசாலைகள் மற்றும் 05 ஆலயங்கள் இணைந்து நடாத்திய தைப்பொங்கல்
உழவர் விழா மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
மண்
முனை வடக்கு பிரதேச செயலாளர் வி வாசுதேவன் தலைமையில் ஆலய முன்றலில்
நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்
எஸ். சிறீதரன்
கலந்துகொண்டார்
பொங்கல் விழாவின் ஆரம்ப நிகழ்வாக
அதிதிகளுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டு, மங்கள
விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அறநெறி பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன
நிகழ்வில்
மேலதிக மாவட்ட பதிவாளர் சுசிகரன்,உதவி பிரதேச செயலாளர் சியாவுள் ஹக்,
பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன், ஸ்ரீP மாங்கேஸ்வரர் ஆலய
வண்ணக்கர்மார்கள், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள்,
அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.