06 பெண்கள் ஓமானில் இருந்து நாடு திரும்பி உள்ளனர்.

 


ஓமானில் இலங்கைத் தூதரகத்தின் கீழ் உள்ள சுரக்ஷா விடுதியில் தங்கியிருந்த 6 பெண்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டையடுத்து நாடு திரும்பியுள்ளனர்.

ஓமானில் உள்ள சுரக்ஷா விடுதியில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி 8 பெண்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது தவிர, ஓமானில் சிக்கியுள்ள மேலும் 18 பேரை அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.