பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதில் 07- பேர் உயிரிழப்பு .

 


நுவரெலியா - நானுஓயா ஊடாக  தலவாக்கலை பகுதியை நோக்கிச் செல்லும் இரதல்ல பிரதான குறுக்கு வீதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி பாரிய விபத்து சம்பவித்துள்ளது.

இதில் சுமார் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (20) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்து சம்பவத்தில் வேன் ஒன்றி்ல் பயணித்தவர்களி்ல் ஐந்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பஸ்ஸில் பயணித்த 42 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.