நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (21) மதியம் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இன்றையதினம் வரை பல காட்சிகள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறும் என இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.