எம்.ஜி.ராமச்சந்திரனின் 106ஆவது பிறந்தநாள் விழா.

 


 எம்.ஜி.ராமச்சந்திரனின் 106ஆவது பிறந்தநாள் விழா கரவெட்டி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கரவெட்டி பலநோக்கு
மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
எம்.ஜி.ஆரின் பெயர் பொறிக்கப்பட்ட கேக் வெட்டி, நிகழ்வில் பங்கேற்றோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
நிகழ்விற்கு வருகைதந்த கலைஞர்களால் எம்.ஜி.ஆர் பற்றிய உரைகளும், திரைப்படப் பாடல்களும் ஏனைய கலை
நிகழ்வுகளும் ஆற்றுகை செய்யப்பட்டன.
நிகழ்வில் எம்.ஜி.ஆரின் இரசிகர்கள், நற்பணி மன்ற உறுப்பினர்கள் சமூக சேவை செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என
பலர் கலந்து கொண்டனர்.