கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை மொலகொட பகுதியில், இரண்டு வாகனங்கள்
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 12 பேர், கேகாலை
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து
தெல்தோட்டை நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும், கண்டியிலிருந்து கொழும்பு
நோக்கிப் பயணித்த வேன் ஒன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.