14வயது மாணவி துஷ்பிரயோகம் ,65 வயது முதியவர் அதிரடியாக கைது.

 


கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமியை  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேக நபரை இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

கந்தளாய் கோவில் கிராமத்தைச்  சேர்ந்த 65 வயதுடையவர், ஒன்பதாம் தர மாணவியை, பணம் தருவதாகக் கூறி துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ அறிக்கைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக சிறுமி உறவினர்களிடம் தெரிவித்ததையடுத்து, உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.