தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் தரங்க மஹரத்னே முன்னிலையில் பிரதிவாதி ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
கனகரத்தினம் ஆதித்யன் என்ற தமிழ் அரசியல் கைதியே 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக அதிநவீன உபகரணங்களை கடத்திய குற்றச்சாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கனகரத்தினம் ஆதித்யன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
கனகரத்தினம் ஆதித்யன் சார்பில் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஸ் அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மன்றில் ஆஜராகி வழக்கை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.