ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 14 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் , மட்டு ஊடக ஊடக அமைப்பின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள உயிரிழந்த ஊடகவியலார் நினைவுத்தூபியில் இந்நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்கவின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு தீபச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
சிரேஸ்ட ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க சண்டே லீடர் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக இருந்த போது இனந்தெரியாத குழுவினால் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.
சமூகத்தில் எந்தவொரு நிலையில் இருந்தாலும் பின்வாங்காமல் தனது பத்திரிகையூடாக லசந்த விக்கிரமதுங்க தைரியமாக வெளிப்படுத்தினார்.
இவரின் ஊடக சேவையை கொளரவிக்கும் வகையில் ஊடக சுதந்திரத்திற்கான யுனெஸ்கோவின் குயிலமோ கேனோ விருது மற்றும் NATIONAL PRESS CLUP, PRESS FREEDOM விருது ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.