(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு
வெல்வாவெளி பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ் பிரயோகம்
மேற்கொண்ட 18 வயது இளைஞன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (25) கைது
செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த வரும் ஒக்டோபர் மாதம்
அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 18 வயது இளைஞன் ஒருவர் பாலியல் துஷ் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள்
பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்த நிலையில் குறித்த இளைஞன்
தலைமறைவாகியிருந்துள்ளார்.
இதனையடுத்து தலைமறைவாகிய இளைஞனை
பொலிசார் தேடிவந்த நிலையில் நேற்று இரவு குறித்த இளைஞனை கைது செய்ததுடன்
இவரை இன்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.