ஓமானில் இருந்து 15 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

 


மானின் மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மேலும் 15 இலங்கை பணிப்பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று (15) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

தற்போது 117 இலங்கை பணிப் பெண்கள் ஓமானில் உள்ள  பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 17 பேர் இலங்கைக்கு அனுப்புவதற்காக ஓமானில் உள்ள மஸ்கட் விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

எனினும், 17 பேரில் ஆவணச் சிக்கல்கள் காரணமாக இருவரை மஸ்கட் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர் என்றும் அதனை அடுத்து 15 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குறித்த வீட்டுப் பணிப்பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழுவும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்து இக்குழுவினரை வரவேற்றனர்.

கடந்த வாரமும், பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு பெண்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஓமானின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 118 இலங்கை பணிப்பெண்களில் 67 வயதான பெண்ணொருவர் அண்மையில் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்திருந்தது.