சாதனைகள் பல்வேறு வகையில், நிகழ்த்தப்பட்டாலும், விசேட தேவையுடைய
மாணவர்களின் சாதனைகள் என்பது பல்வேறு தளங்களிலும் பதிவு செய்யப்பட வேண்டிய
ஒன்றாக மாறியுள்ளது.
வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில்
பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி விவேகானந்தா
வித்தியாலயத்தின் விசேட தேவையுடைய மாணவன் குபேந்திரன் றினோபன்
160புள்ளிகளைப்பெற்று
பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவன் என்ற சாதனையினை படைத்துள்ளார்.
செங்கலடியினை
சேர்ந்த குபேந்திரன்-கஜேந்தினி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வாரன
றினோபனிற்கு பிறவியிலேயே இரண்டு கால்களும் நடக்கமுடியாத நிலையிலும் இரண்டு
கைகளும் தொழிற்பாடு குறைந்த நிலையிலேயே இருந்துவந்துள்ளது.
ஆனாலும்
குறித்த மாணவன் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளில் திறமையான
மாணவனாகயிருந்துவந்த நிலையில், வெளியான 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில்
160 புள்ளிகளைப் பெற்று, பாடசாலை மட்டத்தில் முதலிடத்தைப்
பெற்றதோடு, கற்றலுக்கு உடற்குறைபாடுகள் ஒரு போதும் தடையாகாது என்பதையும் நிருபித்துள்ளார்.
பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமைசேர்த்துள்ள றினோபன் எதிர்காலத்தில் தான்ஒரு பொறியியலாளராக ஆக வேண்டும் என்பதே இலட்சியம் எனவும்
தெரிவித்தார்