மட்டக்களப்பு கல்லடி 171 கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட முதியவர்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன.

 


 

 மட்டக்களப்பு கல்லடி 171 கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட முதியவர்களுக்கு பொங்கல் பொதிகள்
வழங்கப்பட்டன.
தைப்பொங்கல் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில், மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லம் மற்றும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில, எம்.பவளக்காந்தன் தலைமையில் பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் பொதுச்செயலாளர் எஸ்.அருள்மொழி, மன்றத்தின்உபசெயலாளர் பி.முருகதாஸ் , சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்ல உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு
பொங்கல் பொதிகளை வழங்கி வைத்தனர்.