உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகும் வகையில் அனைத்துப் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் நடத்துவது ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம். அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதையடுத்தே இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.